News January 22, 2026

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் சிக்கினான்

image

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமி, வயிற்றில் குழந்தையை சுமப்பது பேரவலம். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டா மூலம் 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். இந்த விஷயம் வெளியே தெரியவர, சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 8, 2026

FLASH: மே 3-ல் நீட் தேர்வு

image

மே 3-ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2026 நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து, இன்று முதல் மார்ச் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு: ₹1,700, OBC-NCL: ₹1,600, SC/ST/PwBD/மூன்றாம் பாலினம்: ₹1,000, வெளிநாட்டினர்: ₹9,500 செலுத்த வேண்டும். SHARE.

News February 8, 2026

குரூப்-2 தேர்வு ரத்தானது திமுக அரசின் நிர்வாக தோல்வி: EPS

image

TNPSC குரூப்-2 மெயின்ஸ் <<19082017>>தேர்வு ரத்து<<>> செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள EPS, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ரத்தாவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘Technical Fault’ என்ற ஒற்றை வரியில் இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளது திமுக அரசின் நிர்வாகத்தின் பெரும் தோல்வி என கடுமையாக சாடியுள்ளார்.

News February 8, 2026

தமிழ் நடிகர் சுனில் காலமானார்.. கடைசி PHOTO

image

’10 எண்றதுக்குள்ள’, ‘மிராய்’ தமிழ் படங்களில் நடித்த <<19075789>>சுனில் தபா(68)<<>> மாரடைப்பால் காலமானார். நேபாளை சேர்ந்த இவர், அந்நாட்டு மொழிப் படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக ‘மேரி கோம்’ படத்தில் இவரது நடிப்பு பெரும் கவனத்தை பெற்றது. காத்மண்டுவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சுனில் உடலுக்கு பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!