News April 10, 2025
சிறுமியின் நிர்வாண படம் கேட்டு டார்ச்சர் – போக்சோவில் கைது

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News September 19, 2025
நெல்லை மாணவர்கள் சாதனை!

நெல்லை என்.சி.சி மாணவர்கள் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை; 50வது தமிழக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். நெல்லை 5 தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள் 3 பேர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றனர். பாளை., தனியார் கல்லூரி மாணவி பிரியங்கா 3பி ஓபன் சைட் ஜூனியர் பிரிவில் தங்கபதக்கம், புரோன் ஓபன் சைட்டில் வெண்க லபதக்கம் வென்றார்.
News September 19, 2025
நெல்லை: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <
News September 19, 2025
கவின் கொலை வழக்கு: போலி பதிவெண் பயன்படுத்திய சுர்ஜித்!

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் ஆக. 18 முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை SI சரவணனிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்த சுர்ஜித் பயன்படுத்திய டூவீலர் பதிவெண் போலி என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்காக ஜெயபால் என்பவர் இடத்தையும் சுர்ஜித் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.