News April 8, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (25).கராத்தே மாஸ்டரான இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்த வழக்கிற்கான விசாரணை நேற்று தி.மலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரவீன் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News April 16, 2025
சோமாசிபாடி முருகனை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்

தி.மலை, சோமாசிபாடி மலையில் ‘பவர்புல்’ முருகன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் கிருத்திகையில் மட்டுமே பூக்கும் செங்கழுநீர்ப் பூ, முருகனுக்கு சாத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மறைந்து போவது, கலியுகத்தின் அதியம். இங்கு, செவ்வாய்கிழமைகளில் 6 தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம், நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *நண்பர்களுக்கு பகிரவும்*
News April 16, 2025
திருவண்ணாமலை: ஓதுவார் பயிற்சி பெற நல்ல வாய்ப்பு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடைபெறுகிறது. இதற்கு, 13-24 வயதிற்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்துக்கள் விண்ணப்பிக்கலாம். இலவச உணவு, உறைவிடம், மாதம் ரூ.4,000 வழங்கப்படும். விருப்பமுள்ளோர் <
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.