News March 27, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி. இவா் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், சுரேஷை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை, புதுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10000 அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.
Similar News
News August 28, 2025
புதுச்சேரி: 10th போதும் ரயில்வேயில் வேலை!

புதுச்சேரி மக்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதற்கு 10ம் வகுப்பு, ITI போதுமானது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் <
News August 28, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் பெண்கள் தங்களின் புகைப்படம், வீடியோக்களை யாருக்கும் பகிர வேண்டாம். பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்கள் புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.
News August 28, 2025
புதுச்சேரி: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, ஆயில் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள (Junior Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் ரூ.26,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <