News May 26, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தீவிர விசாரணை

ஆண்டிபட்டி, கன்னியப்பிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமியின் தாயார் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.சிறுமியின் தாயார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
தேனி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
தேனி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை <
News March 3, 2026
தேனியில் மகளிர் தின மாரத்தானில் பங்கேற்க அழைப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் தேனி இணைந்து பெண்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வரும் மார்ச் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துகின்றன. பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் 73392 26004 என்ற எண்ணில் மார்ச் 6-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


