News April 6, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 6, 2025
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

திருப்பத்தூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
JUST IN:ஜலகம்பாறையில் வெள்ளப் பெருக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமாஇ பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், தற்போது நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெறுக்கு காரணமாக அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!
News November 6, 2025
திருப்பத்தூர்: மிஷின் மீது விழுந்து கொடூர பலி!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தோல் தொழிற்சாலையில், பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவர் இன்று (நவ.6) தோல் பதனிடும் இயந்திரத்தின் மீது ஏறி பணியாற்றி வந்த நிலையில், திடீரென இயந்திரத்தின் மீது இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


