News February 28, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டு சிறை

சேலம், அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற 17வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த கணேஷ் என்ற வாலிபர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றது நடந்தது. அதில், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Similar News
News February 28, 2025
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் மார்ச் 8ஆம் தேதி ஆத்தூர் தேவியா குறிச்சியில் உள்ள தாகூர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை வாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறாலம்.
News February 28, 2025
சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில், 2025ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 8ல் நடக்க உள்ளது. இது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைவாக, சமரச முறையில் தீர்வு காண உதவுகிறது.
News February 28, 2025
ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியே இயக்கப்படும் சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312) சேவை வரும் மார்ச் முதல் வாரத்துடன் முடியவிருந்த நிலையில் மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஏப்ரல் கடைசி வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.