News January 22, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது 

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர் சண்முகம் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் சிறுமியின் தாயாருக்கு உதவி செய்வது போல் வந்து மகளிடம் அத்துமீறியதாக தாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 23, 2025

திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தினரால் விநியோகம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில், இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமீத் கூறியுள்ளார். 

News August 22, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம், ஊதியூர், செய்யூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணிபுபவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News August 22, 2025

திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

image

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit

error: Content is protected !!