News January 29, 2025
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 5 வருடம் சிறை

தூத்துக்குடி பெரியசாமிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்(35). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சக்திவேலுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News August 27, 2025
குலசையில் துறைமுகம் அமைய சாத்தியமில்லை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஏற்கனவே சிறிய ரக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்தத் துறைமுகம் குலசேகரன்பட்டினத்தில் அமையவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறொரு இடத்தில் அதே துறைமுகம் அமையும் என நீர்வழிப் போக்குவரத்து துறை சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தூத்துக்குடி: புகார் தெரிவிக்க எண் வெளியீடு

திருச்செந்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் 9363779191 என்ற நகராட்சியின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
தூத்துக்குடி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <