News February 10, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – வெளியான அதிர்ச்சி தகவல்

ஏற்காட்டில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்த இளைய கண்ணு என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாணவிகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை வைத்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி- நியூஸ் தமிழ்)
Similar News
News March 3, 2026
சேலத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

சேலம் 4 ரோடு சாமுண்டி வளாகத்தில் நாளை மார்ச் 04 முதல் 13 வரை தங்க நகை மதிப்பீட் டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கடன் தொகை வழங்கும் முறை, ‘ஹால்மார்க்’ தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.பயிற்சி முடித் தவர்கள் கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.விவரங்களுக்கு: 94437 28438
News March 3, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 3, 2026
சேலம் காவல்துறை எச்சரிக்கை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் OTP உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மோசடி ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


