News June 16, 2024

சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம் நிறுத்தம்

image

வாலாஜா அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சமூக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு சிறுமிகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். மேலும், 4 சிறுமிகளும் வேலூர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News March 1, 2026

ராணிப்பேட்டை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

‘திராவிட சூரியனே!’ – முதல்வருக்கு ஆர்.காந்தி உத்வேக வாழ்த்து

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை (மார்ச்.1) முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். “திராவிட சூரியனே!” எனப் புகழ்ந்துரைத்த அவர், முதல்வர் மக்கள் நலன் கருதி நீண்ட காலம் சேவை செய்ய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார். கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாகத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!