News December 19, 2025
சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக: EPS

அதிமுக சார்பில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பேசிய EPS, சிறுபான்மை மக்களின் காவலனாக அதிமுக உள்ளது என்றார். மேலும், தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் விடியல் என்பதே இருக்காது என்ற அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
கர்ப்பிணிகள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் தினமும் வாக்கிங் செல்வது தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும், 5,000-10,000 அடிகள் வரை நடக்க வேண்டும் என்று கூறும் டாக்டர்கள், ஒரே நேரத்தில் நடக்காமல் காலை, மதியம், இரவு என பிரித்து நடக்கலாம் என்கின்றனர். இதனால், *சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் *குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் *சுகப்பிரசவ வாய்ப்புகள் அதிகமாகும் என்கின்றனர் டாக்டர்கள்.
News December 24, 2025
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக: நயினார்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக அரசு வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஏக்கருக்கு ₹30,000 வழங்கி விவசாயிகளின் துயரத்தை துடைப்பதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார். திமுக அரசின் இந்த அலட்சியமே அக்கட்சியின் அரியணைக்கு முடிவுரை எழுதப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 24, 2025
₹3,100 கோடி வசூலை வாரிக்குவித்த அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார்: 3’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், படத்தின் வசூலை விமர்சனங்கள் எந்தளவிலும் பாதிக்கவில்லை. கடந்த 19-ம் தேதி வெளியான இந்த படம், கடந்த 5 நாள்களில் உலகளவில் கிட்டத்தட்ட ₹3,135 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ₹82 கோடி வசூலித்துள்ளதாம். நீங்க படம் பாத்தாச்சா?


