News March 1, 2026

சிறுநீரகக் கற்களை கரைக்குமா வாழைத்தண்டு ஜூஸ்?

image

சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு பலரும் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கச் சொல்வார்கள். வாழைத்தண்டு ஜூஸிற்கு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மையே. ஆனால், அது கற்களின் அளவைப் பொறுத்தே அவற்றை கரைக்க வாழைத்தண்டு ஜூஸ் போதுமா என்ற முடிவுக்கு வரமுடியும். மிகச் சிறிய கற்களாக இருந்தால் வாரத்தில் 3 நாள்களுக்கு 30 மில்லி வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்த சிகிச்சை போதாது.

Similar News

News March 1, 2026

போர் பதற்றம்.. நடிகர் அஜித் எங்கு இருக்கிறார்?

image

மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நடிகர் அஜித் எங்கு இருக்கிறார் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடைசியாக துபாயில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற கார் ரேஸிங்கில் பங்கேற்ற அவர், அதன் பிறகு என்ன செய்கிறார், எங்கு உள்ளார் என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அவர் குறித்த அப்டேட் வேண்டுமென ரசிகர்கள் SM-ல் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

News March 1, 2026

36 ஆண்டுக்கால பவர்.. யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

image

1939-ம் ஆண்டு ஈரானின் மஷ்ஹத் நகரில் அயதுல்லா <<19268432>>அலி கமேனி<<>> பிறந்தார். இஸ்லாமிய புரட்சி தலைவர் ருஹோல்லா கமேனியின் தலைமையில், ஷா ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். 1981– 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்த கமேனி, 1989-ம் ஆண்டு ஈரானின் உயர் தலைவராக பொறுப்பேற்றார். 36 ஆண்டுகள் 6 மாதங்கள் அப்பதவியை வகித்த அவர், தொடர்ந்து USA-க்கு எதிரான நிலைப்பாட்டையே கடைபிடித்து வந்தார்.

News March 1, 2026

விடைபெறத் தயாராகுங்கள்: அதிமுக

image

எந்த Getup போட்டுட்டு வந்தாலும், உங்களுக்கு இனி Get out தான் என ஸ்டாலினின் போட்டோவை சித்தரித்து அதிமுக விமர்சித்துள்ளது. வேஷங்கள் கலையும் நேரம் வந்துவிட்டது. இனி எந்த வேடம் போட்டும் எந்த பயனும் இல்லை, உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை, உங்கள் வீழ்ச்சிக்கான தொடக்கவுரையை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள். உங்கள் அலங்கார அரசியலின் முகத்திரை கிழியும் நேரம் இது, விடைபெறத் தயாராகுங்கள் எனவும் சாடியுள்ளது.

error: Content is protected !!