News September 1, 2025
சிறுகமணி: மண்புழு உரம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல்

திருச்சி, சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண் வளத்தை மேம்படுத்துவதற்கு மண்புழு உரம் மிகச்சிறந்ததாகும். மக்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம். மண்புழு உரம் வளர்க்கும் பைகள் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் செப்.,22-ம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி, வரும் 25-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி, வரும் 29-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
திருச்சி: 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு

திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை (செப்.4) முதல் செப்.,15-ம் தேதி வரை புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அடிப்படை மருத்துவ அறிவு, எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு 91500 84161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 3, 2025
திருச்சி: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

திருச்சி மக்களே..சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.