News September 17, 2025
சிறுகமணி ஆடு,மாடு,கோழி வளா்ப்புப் பயிற்சி

திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு,மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. நாட்டுக்கோழி, கறவைமாடு வெள்ளாடு, செம்மறி ஆடு இனங்கள், ஆடுகளை தோ்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை,தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு,நோய் தடுப்பு முறைகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
Similar News
News September 17, 2025
திருச்சி To டெல்லிக்கு நேரடி விமான சேவை

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்றிலிருந்து தொடங்கிய நிலையில், திருச்சி விமான நிலையத்தில் விமான பயணிகள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
News September 17, 2025
திருச்சி: விதைப்பண்ணை பதிவு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்டத்தில், விதைப்பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார நிலை விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களிலோ வாங்கி, அதற்கான ரசீதுடன் பதிவு கட்டணம் ரூ.25, விதை மாதிரி பரிசோதனை கட்டணம் ரூ.80, வயலாய்வு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.100 செலுத்தி விதை சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என உதவி இயக்குநர் நளினி தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயிலானது இன்று (செப்.17) மற்றும் செப்.22 ஆகிய தேதிகளில் திருச்சி – கஞ்சிக்கோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுன் – கஞ்சிக்கோடு இடையே மட்டும் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.