News February 7, 2026
சிறிய அணியிடம் போராடி வென்ற பாகிஸ்தான்!

டி2O WC-ன் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய பாக்., அணியில், ஃபர்ஹான்(47) மட்டுமே குறிப்பிடதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரில் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை விளாசி ஆட்டத்தை பாக்., பக்கம் திருப்பினார்.
Similar News
News February 12, 2026
வருமானச் சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி?

TNeGA போர்ட்டலில், பயனாளர் உள்நுழைவு-ஐ கிளிக் செய்யவும் ◆REV-103 Income Certificate-ஐ கிளிக் பண்ணுங்க ◆ஆதார் நம்பரை வைத்து புதிய CAN எண்ணை பெறவும். அதை பதிவிட்டால், உங்களின் தகவல்கள் தானாக நிரப்பப்படும் ◆குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறை, வயது, மாத வருமானத்தை கொடுத்து Submit-ஐ கிளிக் செய்து, ஆவணங்களை அப்லோட் செய்யவும் ◆Self-declaration form-ஐ உள்ளிட்டு, கட்டணம் செலுத்தினால் சான்றிதழ் கிடைக்கும்.
News February 12, 2026
தேர்தல் புறக்கணிப்பு.. CM ரங்கசாமி அறிவித்தார்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக வருகிற சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்க தயார் என்று CM ரங்கசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, இம்முடிவை ரங்கசாமி உறுதியாக எடுத்தால் அதனை ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியாகிய நிலையில், இவ்வாறு CM அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 12, 2026
ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு.. அரசு தகவல்

ரேஷன் கடைகளில் இரும்பு சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 52% பேர் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்த சோகையுடன் உள்ளதாகவும், இதை தடுக்கவே இந்த உப்பு பாக்கெட்டுகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.


