News December 27, 2025
சிறப்பு ரயில் இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக வருகின்ற 29-ம் தேதி கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல டிச. 30-ம் தேதி ராமேஸ்வரத்துக்கு கோவைக்கு இந்த ரயில் இயக்கப்படுவதால் ராமேஸ்வரம் செல்லும் உடுமலைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
திருப்பூர்: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News December 28, 2025
திருப்பூரில் பாலியல் வழக்கில் அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய மணிகண்டன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
News December 28, 2025
திருப்பூர்: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது திருப்பூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)


