News November 27, 2024
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக கர்நாடகா மாநிலம், பெலகாவி- கொல்லம் இடையே டிச.09 முதல் ஜன.14 வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் (07317/07318) இயக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள்கிழமைதோறும் பெலகாவியில் இருந்தும், மறுமார்க்கத்தில், செவ்வாய்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும்.
Similar News
News August 29, 2025
கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணாக்கர்களுக்கான ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவி சேலம் புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆக.29) பார்வையிட்டார்.
News August 29, 2025
சேலம் மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு அறிவிப்பு

சேலம் மாவட்ட மக்களே..வாகனம் ஓட்டும் போது மொபைலில் செய்தி அனுப்புவது, உயிருக்கு ஆபத்தானது என சேலம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில் வாகனம் ஓட்டவும், மொபைல் பயன்படுத்தவும் முடியாது என்பதால், செல்பேசி பயன்படுத்துவதைத் தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உயிரைக் காக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளது.
News August 29, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ரயில்வே மேம்பாலத்தில் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, ஆக.30, செப்.01, செப்.02 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் (56108) ஈரோட்டில் இருந்து மொரப்பூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் (56107) மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.