News April 11, 2025
சிறப்பு பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடு–ளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (ஏப்.12) சத்திரமனை, பூலாம்பாடி, ஓதியம் மற்றும் அடைக்கம்பட்டி ஆகிய கிராமத்தில் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
பெரம்பலூரில் நாம்தமிழர் கட்சி சீமான் விமர்சனம்

தமிழ்நாட்டில் 50ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்த முடியாது, கூட்டத்தை பார்க்காதீர்கள் கொள்கையை பாருங்கள். தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு கூடும் மக்கள் கூட்டம் குறித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
News September 21, 2025
பெரம்பலூரில் கல்வி கடன் வழங்கிய அமைச்சர்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், நடத்தப்பட்ட கல்வி கடன் முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கலந்து கொண்டார்.
News September 21, 2025
மாநில துணை தலைவராக பெரம்பலூரை சேர்ந்தவர் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை மாநில துணை தலைவராக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மகேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறையின் மாநில தலைவர் ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மாநில பொறுப்பில் நியமிக்கப்பட்ட மகேஷ், மாநில மாவட்ட வட்டார தொகுதி தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.