News June 1, 2024
சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா

பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (ம) சென்னை பாவை பவுண்டேஷன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்துக்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊ.ஒ.தொ. பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி மே.20 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் (ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
Similar News
News September 11, 2025
பெரம்பலூர் மக்களே இன்று இங்கே போங்க!

பெரம்பலூர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு, முதியோர் தொகை போன்ற சேவைகளை எளிய முறையில் பெற முடியும். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று 11.09.2025
✅வேப்பந்தட்டை ( வாளிகண்டாபுரம்)
✅வேப்பூர்( திருமாந்துறை)
நாளை 12.09.2025
✅ஆலந்தூர்( கீழுமாத்தூர்)
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அம்மாபாளையம் ராஜம்மாள் பரவாசு திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், இலந்தங்குழி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேலமாத்தூர் ஆனந்த் மஹாலிலும் (10.09.2025) நடைபெற்றது.
இதில் அம்மாபாளையத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
News September 11, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி பெண் விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரேவதி (35) என்பவர் தனது தாயுடன் சோழப் பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தனது இடது காலால் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.