News March 29, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில், உலக புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10 மணிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News September 8, 2025

நாமக்கல்லில் நாளை மின் தடை!

image

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கபிலர் மலை, அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, தண்ணீர் பந்தல், வீ.பாளையம், சேளூர்நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, எருமப்பட்டி, முசிறி, வளையப்பட்டி, நடந்தை ஆகிய பகுதிகளில் நாளை(செப்.9) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2025

நாமக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

நாமக்கல் மக்களே.., இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்:
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!