News April 6, 2025
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருவேங்கடமுடையான்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News April 8, 2025
கந்துவட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல்

ஏழாயிரம்பண்ணை அருகே கண்டியாபுரத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி ராசகுரு (27), அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையிடம் ₹15,000 வட்டிக்கு பணம் பெற்று, சரிவர பணம் செலுத்தாததால், ராசகுருவின் இருசக்கர வாகனத்தை, செல்லத்துரை பறிமுதல் செய்துள்ளார். பின்னர், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் செலுத்தக் கூறி கொலை மிரட்டல் விடுத்துளார். இதுகுறித்த புகாரில்பேரில் செல்லத்துரை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 8, 2025
தண்ணீர் தொட்டியில் குடித்து, குளித்தும் மகிழ்ந்த யானைகள்

ஸ்ரீவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தர தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரெங்கர் கோயில் பீட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனம் மற்றும் சுற்றுகாலநிலை மாற்றம் துறைகூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.
News April 8, 2025
சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் காரியாபட்டி அருகே சிப்காட் அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.