News February 4, 2026

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்குப் பாராட்டு

image

வேலூர்: மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பேர்ணாம்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காட்பாடி தலைமை காவலர் கோபிநாத் ஆகியோரை நlமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயிலுவாகனன் இன்று (04.02.2026) நேரில் அழைத்து பாராட்டி, பண வெகுமதி வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினார். உடன் காவல் அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News February 15, 2026

வேலூரில் ‘நமோ டிராபி’ மராத்தான்

image

மத்திய அரசின் ஒலிம்பிக் 2026 மற்றும் கஹேலோ இந்தியா 2026 முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட பாஜக விளையாட்டுப் பிரிவு மற்றும் ‘நமோ இளைஞர் அறக்கட்டளை’ சார்பில் இன்று (பிப்.15) காலை மராத்தான் போட்டி நடைபெற்றது.​ இதை பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் தசரதன் விநாயகம், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர் .

News February 15, 2026

வேலூரில் அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

image

தேசிய வேலையுறுதித் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று (பிப்.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களுக்கு பணிகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

News February 15, 2026

வேலூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!