News June 14, 2024

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

image

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Similar News

News March 2, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்று மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய பயனாளிகள் பயன்படுத்தி சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். SHARE IT

News March 2, 2026

மஞ்சள் சந்தை: ஹோலிபண்டிகை விடுமுறை தேதியில் மாற்றம்

image

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 2, 2026

ஈரோடு மக்கள் கவனத்திற்கு

image

சமூக வலைதளங்களில் பரவும் 77.4% போலிச் செய்திகள் அரசியல் மற்றும் மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஈரோடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகள் மூலம் இவை வேகமாகப் பரப்பப்படுகின்றன. மக்கள் எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!