News June 1, 2024
சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு காமராஜர் விருது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு.
Similar News
News October 13, 2025
விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 13, 2025
ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News October 13, 2025
விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.