News April 24, 2024
சிறந்த பூங்கா போட்டி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 126வது மலர் காட்சி முன்னிட்டு சிறந்த பூங்காக்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு படிவங்கள் பூங்கா அலுவலகத்தில் 24ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூங்கா உரிமையாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 27ஆம் தேதிக்குள் பூங்கா பதிவு ஒன்றுக்கு ரூ.100 கட்டணத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
Similar News
News January 9, 2026
அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதிகள் நிறைந்த சாலையாகும். தற்போது சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு தேடி நீலகிரிக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி மலைப்பாதையில் ஒற்றை காட்டு ஆண் யானை உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News January 9, 2026
நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 9, 2026
கூடலூர் அருகே ராட்சத மலைப்பாம்பு

கூடலூர் நகராட்சி எம்ஜிஆர் நகரில் ஒரு குடியிருப்பின் தோட்ட வேலியில் சுமார் 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதைகண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.


