News November 13, 2024

சிறந்த பள்ளி விருது: செங்கல்பட்டு பள்ளிகள் தேர்வு

image

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சிறந்த 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு கேடயங்கள் வழங்க தொடக்க கல்வி இயக்குனர் கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டில் புழுதிவாக்கம் நடுநிலைப்பள்ளி, ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாராட்டு விழா சென்னையில் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

Similar News

News August 8, 2025

செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

image

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 8, 2025

செங்கல்பட்டில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!