News August 15, 2025

சிறந்த நகராட்சிகளில் 3ம் இடம் பிடித்த பெரம்பலூர்

image

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (15/8/25) சுதந்திர தினத்தை ஒட்டி வழங்கப்படும் சிறந்த மூன்று நகராட்சிகளில் பெரம்பலூர் நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் இதில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. மூன்றாம் பரிசு பெற்ற பெரம்பலூருக்கு ரூ.10 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது.

Similar News

News September 20, 2025

பெரம்பலூர்: லாரி கவிழ்ந்து விபத்து

image

பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் துறைமங்கலம் சாலையில் அதிகமாக கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் துறையூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தப் பகுதியில் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கு மாற்று பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.

News September 20, 2025

பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

பெரம்பலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

image

பெரம்பலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!