News December 13, 2025
சியா விதைகளை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

ஆரோக்கியமான உணவுகளில் தவறாமல் இடம்பெறுவது சியா விதைகள். நன்மைகள் அதிகம் என்றாலும் அளவை மிஞ்சினால் பக்க விளைவுகளும் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். *அதிக நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை (வயிறு வலி, வீக்கம்) ஏற்படுத்தும் *விதைகள் உணவுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் *BP-யை குறைப்பதால், ஏற்கெனவே Low BP இருப்பவர்களுக்கு தலைசுற்றல் ஏற்படுத்தும் *சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
Similar News
News March 2, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $141 (இந்திய மதிப்பில் ₹12,842) உயர்ந்து $5,372.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $3 உயர்ந்து $95.59-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
News March 2, 2026
CM ஸ்டாலினுடைய கலாச்சாரம் இதுதானா? தமிழிசை

சுமார் ₹7 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்க TN-க்கு வந்த PM மோடியை ஒட்டுமொத்த TN-ம் உற்சாகத்தோடு வரவேற்றது என தமிழிசை கூறியுள்ளார். ஆனால் CM ஸ்டாலின் மட்டும் PM-ஐ வரவேற்க வரவில்லை என்ற அவர், இது என்ன மாதிரியான கலாச்சாரம் என கேள்வி எழுப்பினார். மேலும், TN வளர்ச்சித் திட்டங்களை வழங்க வந்த PM-ஐ, முதல்வர் வரவேற்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு..

*Hall Ticket, தேவையான எழுதுப் பொருள்களை செக் பண்ணிக்கோங்க. *தேர்வு நாள்களில் காலை உணவை தவறாமல் சாப்பிடவும். எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாம் *Question Paper-ஐ முழுமையாக படித்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதி முடித்து விடுங்கள் *பாதியில் பதில் எழுத மறந்து விட்டால், உடனே டைம் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸாக யோசிங்க. பயம் வேண்டாம் மாணவர்களே.. வெற்றி நிச்சயம்!


