News January 30, 2025
சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தம்

திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை ரத்து செய்யக்கோரி வழக்கும் தொடரப்பட்டிருந்த நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. மீண்டும் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிட்டு, 2024-ல் வழங்கப்பட்ட ஒப்புதலை தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.
Similar News
News September 2, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு 17 வகைப்பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த 2024-25 ஆம் ஆண்டு சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாங்கள் www.tntourlamawards.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 1, 2025
திருவள்ளூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 29595450 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.