News January 17, 2026
சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆகணும்: TTV

ஜன நாயகன் படத்தை நீதிபதிகள் தடை செய்துள்ளபோது அரசு மீது எப்படி குற்றம் சுமத்த முடியும் என TTV தினகரன் கேட்டுள்ளார். மேலும், தனக்கு பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை என்றவர், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று தவெக தான் கேட்டது. அதன்படி தற்போது நடக்கும் சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆக வேண்டும். அது எப்படி பாஜகவின் அழுத்தமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 31, 2026
நாளை விடுமுறை கிடையாது

சனிக்கிழமை இரவு வந்தாச்சு.. அப்பாடா நாளைக்கு லீவு என பலரும் ரிலாக்ஸாக இருப்பீர்கள். ஆனால், விடுமுறை இல்லை. என்ன சொல்றீங்கன்னு யோசிக்கிறீங்களா? விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. அதனால், இந்திய பங்குச்சந்தைகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் காரணமாக தங்கம் விலையிலும் மாற்றம் இருக்குமாம். அதனால், நாளை பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது!
News January 31, 2026
சர்வாதிகாரிகளின் DNA இபிஎஸ்: MRK பன்னீர்செல்வம்

CM ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுவதாக <<19014905>>EPS <<>>விமர்சித்ததற்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மோடி என்ற சர்வாதிகாரியை போற்றும் EPS, சர்வாதிகாரி பற்றி பாடம் எடுப்பதா என்றும், உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் DNA-வாக EPS உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து EPS-யின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்; அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே, மகளிர் உரிமை தொகை உயர்வு பற்றி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த தேர்தல் வாக்குறுதியில் அதற்கான அறிவிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


