News January 17, 2026

சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

image

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

திண்டுக்கல்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

திண்டுக்கல் மக்களே இலவச WIFI வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!