News November 15, 2024
சின்னமிட்டஅள்ளி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

காரிமங்கலம் சின்னமிட்டஅள்ளி ஊ. ஒ. தொ பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் வழங்கினார். காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உதவி ஆசிரியர் புஷ்பராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற பள்ளி நிர்வாகத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News September 24, 2025
தருமபுரி: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!
News September 24, 2025
தர்மபுரி: ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது

தர்மபுரி, காரிமங்கலம் அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் அவர்களது 16 வயதுடைய 2வது மகள், அதே ஊரை சேர்ந்த மணி (எ) நிர்மல்குமாருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க, சிறுமியின் தாயிடம் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.
News September 24, 2025
தருமபுரி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு, பெத்தனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (38), நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால், மனமுடைந்து வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.