News July 4, 2025

சின்னகாவனத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத் தொடக்க விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி சிறப்பித்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News August 24, 2025

திருவள்ளூர்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04427661230) தொடர்பு கொள்ளுங்க.

News August 24, 2025

தனியார் பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தனியார் பேருந்தில் சோதனை செய்த போது 12 கிலோ கஞ்சாவோடு இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

News August 24, 2025

திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!