News April 15, 2024

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில் கொள்ளை

image

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் அன்பழகன் என்பவர் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

image

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

News April 19, 2025

பெண்கள் உதவி மையத்தில் வேலை

image

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, வரும் 30ஆம் தேதிக்குள் சென்னை கலெக்டர் ஆபிசுக்கு நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம்.

News April 19, 2025

3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் 

image

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!