News January 25, 2026
சினிமா பாணியை மாற்றுவாரா விஜய்?

கட்சி தொடங்கியது முதலே இலைமறைக்காயாகவே விஜய் பேசி வருகிறார். இன்று கூட <<18953053>>திமுக,<<>> அதிமுகவை மறைமுகமாகவே விமர்சித்தார். வேலுநாச்சியார் வரலாறைக் கூறி, <<18953147>>கூட்டணி<<>> பற்றிய நிலைப்பாட்டையும் (தனித்து போட்டி) மறைமுகமாகவே தெரிவித்தார். இவ்வாறு பேசுவது சினிமாவுக்கு நன்றாக இருக்கலாம், பொதுமக்களிடம் தெளிவான புரிதலை ஏற்படுத்துமா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News February 1, 2026
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இவ்வளவா? வெளியான தகவல்

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ₹54 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதி நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7.9 சதவீதம் அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். 2025-26-ல், ₹50.65 லட்சம் கோடி பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. அத்துடன், இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 6.5% ஆக இருந்தது.
News February 1, 2026
BUDGET UPDATE: வே2நியூஸில் இணைந்திருங்கள்..

நாடே உற்றுநோக்கும் மத்திய பட்ஜெட்டை இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார் தமிழகத்தை சேர்ந்த FM நிர்மலா சீதாராமன். நமது வீட்டில் நடக்கும் வரவு, செலவு கணக்கிலும் இந்த பட்ஜெட்டானது நேரடி மற்றும் மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News February 1, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 நாள்களில் தலைகீழாக குறைந்துள்ளது. கடந்த 30-ம் தேதி 1 அவுன்ஸ் $5,500 ஆக இருந்த தங்கம் இன்று $4,893 ஆக உள்ளது. $607(₹55,651) குறைந்ததன் விளைவாகவே இந்திய சந்தையில் <<19013254>>தங்கம் விலை மளமளவென<<>> குறைந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து டாலர் பக்கம் திரும்பியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.


