News March 22, 2025
சினிமா படப்பிடிப்பு துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அவர்களுடன் துணை நடிகர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அவர் அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 22, 2025
கோவை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சியின் 25-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி வியாழன் காலை 10:30க்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விக்டோரியா காலில் மாமன்ற நிதி குழு தலைவர் மு.பா.சீரா பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மறுநாள் நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
News March 22, 2025
பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடுக் தகவல்

கோவை மதுக்கரை அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா(53). சில தினங்களுக்கு முன் இவர் அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News March 22, 2025
கோவையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை கலெக்டர் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கில் (மார்ச்.30) அன்று நடைபெற உள்ளது. இதில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.