News November 1, 2025

சினிமாவில் பெண்களின் நிறம் பார்ப்பார்கள்: சம்யுக்தா

image

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது என்பார்கள் என்று சம்யுக்தா கூறியுள்ளார். சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது என்ற அவர், நிறம் பார்ப்பார்கள், திருமணம் ஆகிவிட்டதா என்றும் கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Similar News

News November 1, 2025

சபரிமலையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

image

சபரிமலையில் வரும் 17-ம் தேதி மண்டல, மகர விளக்கு பூஜை தொடங்குகிறது. இதனையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவ.1) தொடங்குகிறது. ஆன்லைனில் பதிவு செய்ய, <>இங்கே<<>> கிளிக் செய்யவும். அதேபோல், உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் பம்பா, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சத்திரம் ஆகிய இடங்களில் செயல்படும். நாளொன்றுக்கு 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News November 1, 2025

CM-ஐ குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘: R.S.பாரதி

image

பயத்தின் காரணமாகத்தான் CM ஸ்டாலினை குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘ என்ற அடிப்படையில் மோடி பேசுவதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது பாஜகவுக்கு, குறிப்பாக மோடி, அமித்ஷாவுக்கு கை வந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

News November 1, 2025

அதிமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்

image

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக கட்சியினர் நீக்கம் குறித்து அதிமுக தலைமை அறிக்கையில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், செங்கோட்டையன் நீக்கம் குறித்து வெளியான அறிக்கையில் அப்படி எந்த வார்த்தைகளும் இல்லை. இதனால், OPS, சசிகலா வரிசையில் செங்கோட்டையனும் நிரந்தரமாக நீக்கம் என சொல்லப்படுகிறது.

error: Content is protected !!