News November 24, 2025
சிந்தாமணிப்பட்டி அருகே கொலை மிரட்டல்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு கடவூரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தரகம்பட்டியில் இருந்த போது அங்கு வந்த கௌதமன் கார்த்திக் ராஜா மாணிக்கவாசகம் ஆகியோர் அவரை தகாத வார்த்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
கரூர் மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கரூர் மக்களே மின்தடை அறிவிப்பு! உஷார்

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒத்தகடை, அரவக்குறிச்சி, வெள்ளியணை, தாளப்பட்டி, வல்லம், அய்யர்மலை, தோகைமலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், காணியாளம்பட்டி, மாயனுர், கொசூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, பஞ்சப்பட்டி, கருங்கல்பட்டி, பாலம்பாளுபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News November 24, 2025
குளித்தலை: இந்து முன்னணி நகர துணை தலைவர் காலமானார்

கரூர் மாவட்ட குளித்தலை இந்து முன்னணி கரூர் நகர துனை தலைவர் தியாகராஜன் உடல் நலக் குறைவாக இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பலரும் இறந்த தியாகராஜன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


