News April 20, 2024
சித்ரா பௌர்ணமிக்கு 910 சிறப்பு பேருந்துகள்

தி.மலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு ஏப்ரல் 22, 23 தேதிகளில் மாதவரத்தில் இருந்து தலா 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
தி.மலை: விவசாயி மீது டூவீலர் மோதி விபத்து!

தூசி, வெம்பாக்கம் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீதி மோதி, அவர் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூசி போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
தி.மலை: அரசு தேர்வர்களே.. உங்களுக்கு ஓர் GOOD NEWS!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <
News November 24, 2025
திருவண்ணாமலையில் உலக சாதனை…!

திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, தீபம் வடிவில் 1,500 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி பக்தர்களும் பொதுமக்களும் பெரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


