News May 7, 2025
சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News December 29, 2025
புதுக்கோட்டை: தவறி விழுந்தவர் பரிதாப பலி

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (51) இவர் (டிச.26) ஆலங்குளம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி காவல் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 28, 2025
புதுக்கோட்டை: திருமண தடையை நீக்கும் கோயில்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!


