News April 15, 2024
சித்திரை திருவிழாவில் நகை பறித்த நால்வர் கைது

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் நேற்று ஆவணி மூலவீதி, அம்மன் சன்னதி சந்திப்பில் சுவாமி ஊர்வலத்தின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுகுணா, உமா, செல்வி, ராஜாமணி என்பதும் இவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பவுன் நகையை திருடி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 1, 2026
மதுரை: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள்

மதுரை, தத்தனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் 2017ம் ஆண்டு தனது உறவினர் மகளான சிறுமியை (17), கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தது.
News January 31, 2026
மதுரை: தைப்பூச சிறப்பு ரயில் நாளை இயக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.காலை10.20 மணிக்கு அரக்கோணத்தில்இருந்து புறப்படும் ரயில்10.40 மணிக்கு திருத்தணி சென்றடையும்.10.50 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் ரயில், 11.15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.


