News April 19, 2024

சிதம்பரம் பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு

image

இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்தியாயினி ஜனநாயக கடமையாற்ற இன்று அவரது தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்பு வாக்களித்த தனது விரல்களை காண்பித்த அவர், ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Similar News

News November 20, 2024

கடலூரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 19, 2024

நெல் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 15.11.2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசு, மத்திய அரசை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளித்திட கோரிக்கை விடுத்தது. அதன்படி சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு கால அவகாசத்தினை 30.11.2024 வரை நீடிப்பு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 19, 2024

பண்ருட்டியில் நாளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20-ம் தேதி) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.