News March 21, 2024

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி; அமைச்சர் ஆலோசனை

image

கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட தொகுதி திமுக பார்வையாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 10, 2025

கடலூர்: மின் தடை அறிவிப்பு!

image

கடலூர் கேப்பர்மலை மின் நிலையத்தில் 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழி சோதனைப்பாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிபுலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ். புதுார், எம். புதுார், மணக்குப்பம் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

News September 10, 2025

கடலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகின்ற 13.09.2025 அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039 மற்றும் 9499055907, 9499055908 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

கடலூர்: நேரில் சென்று ஆறுதல் கூறிய எஸ்பி

image

விருத்தாச்சலத்தில் போதையில் 4 நபர்களை தாக்கி விட்டு தலைமறைவு குற்றவாளிகள் கந்தவேல் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிய கந்தவேல் என்பவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு குற்றவாளி சிவா என்பவர் கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு. இருவரையும் பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி தாக்கியதில் படுகாயமடைந்த காவலர்களை எஸ்பி சென்று ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!