News April 15, 2024

சிதம்பரம் குழந்தைகள் காப்பகத்திற்கு உதவிகள் 

image

சிதம்பரம் ஆறுமுக நாவலர் இறகுபந்து விளையாட்டுக் குழும அங்கத்தினர் சார்பில் முதியோர், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நேற்று (ஏப்,14) 70 மாணவ, மாணவிகள், முதியோர்களுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் அவர்களுக்கான துண்டு, காலணி, பிஸ்கெட், பழங்கள், குளியல் சோப், பல் துலக்கும் பிரஷ், வேட்டி,சட்டை, புடவை, டீ சர்ட் உள்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.

Similar News

News February 18, 2026

கடலூர்: கவுன்சிலரின் மனைவி தற்கொலை – போலீஸ் விசாரணை

image

விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. தேமுதிக நகர பொருளாளரான இவர், விருத்தாசலம் நகரமன்ற கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி சத்யாவுக்கு(38) அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

கடலூரில் இயல்பை விட அதிகம் பெய்த மழை!

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 17ம் தேதி வரை இயல்பாக 34.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 7 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.17) அறிவித்துள்ளது.

News February 17, 2026

கடலூர் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல்

image

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் இன்று (பிப்.17) சிறை அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள தொகுதி 16 பகுதியில் உள்ள பலா மரத்தடியில் ஒரு செல்போன் கிடந்தது. இதை பார்த்த போலீசார், அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், செல்போனை பயன்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!