News June 16, 2024

சிதம்பரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன்

image

சிதம்பரம் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா நேற்று நடைபெற்றது. இணைப்பதிவாளர் கோமதி தலைமை தாங்கினார். பொது மேலாளர் விஜயகுமார், உதவி பொது மேலாளர், பணியாளர்கள் முன்னிலை வகித்தனர். கடன் மேளாவில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு மகளிர் குழு ஊதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு 7 கோடி கடனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News

News November 10, 2025

கடலூர்: ரயில் மோதி துடிதுடித்து பலி

image

விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருச்சி மார்க்கமாக சென்ற ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய விருத்தாசலம் போலீசால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

News November 10, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

image

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!