News March 19, 2024
சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டி

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்டது.சிதம்பரம்,விழுப்புரம் ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் விசிக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.இன்று சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6-வது முறை போட்டியிடுகிறார்.
Similar News
News August 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
குறிஞ்சிப்பாடி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை ஆக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
கடலூர்: அரசு கல்லூரி மாணவன் வெண்கல பதக்கம்

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர் லோகேஸ்வரன் சர்வதேச அளவில் நடைபெற்ற தேசிய சீனியர் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இது இவரது இரண்டாவது சர்வதேச பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கடலூர் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.