News January 25, 2026
சிங்க் பக்கத்தில் இதையெல்லாம் வைக்காதீங்க!

கிச்சன் சிங்க் அருகே ஈரப்பதம் இருப்பதால், சில பொருட்களை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மின்சாதனங்கள், மரப்பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை சிங்க் அருகே வைப்பதால், அவை சேதமடைவதுடன், கிருமித்தொற்று மற்றும் விபத்துகளுக்கும் வழிவகுக்கும். அதேபோன்று நல்ல காற்றோட்டமான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் கிளீனர்களை வைப்பதே சரி. இல்லையெனில் அவை வீணாகிவிடும்.
Similar News
News February 7, 2026
CM ஸ்டாலினை சந்திக்கும் OPS?

அதிமுக இணைப்பு கதவை EPS மூடியதால் OPS விரைவில் CM ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் OPS முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டதாகவும், EPS-க்கு எதிராக களமிறங்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் OPS திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 7, 2026
டி20 உலகக் கோப்பை திருவிழா : இன்று தொடக்கம்

10-வது டி20 WC இந்தியா, இலங்கையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், அடுத்த 30 நாள்களுக்கு இடைவிடாமல் 55 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாளான இன்று PAK-NED, WI-SCO, IND-USA அணிகள் மோதுகின்றன. டி20 WC வரலாற்றில், எந்த அணியும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கவில்லை. 2024 சாம்பியன்ஸான இந்தியா இம்முறையும் கோப்பையை வென்று புதிய சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.
News February 7, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 7, தை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


