News September 18, 2024
சிங்கப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூர் கவிஞர்

நேற்று மாலை சிங்கப்பூர் மண்ணில் ”சொல்லாடும் முன்றில் “அமைப்பின் சார்பாக நிகழ்ந்த மூன்றில் கவியரங்கத்தில் கல்லும் பாடாதோ கவி என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் செந்துறை ஒன்றியம் உகந்தநாயகன் குடிக்காட்டை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான சி. கருணாகரசு அவர்கள் தலைமை ஏற்று தனது படைப்பையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 21, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய (ஆக.21) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு

அரியலூர் இளைஞர்களே.. சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 21, 2025
அரியலூர்: தமிழக போலீசில் வேலை

அரியலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இங்கே <