News April 8, 2025
சிக்ஸ் பேக்ஸ் மோகம்- பலியான பாடி பில்டர்

காசிமேட்டில் உடலை விரைவாக கட்டுமஸ்தாக மாற்ற நினைத்த ராம்கி(35), தனது பயிற்சியாளர் தினேஷ் பரிந்துரைத்த ஸ்டீராய்டை எடுத்துக்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிந்துரை இல்லமால் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது, சமூக வலைத்தளங்களை பார்த்து வரும் மோகத்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில், 308 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
News April 17, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (ஏப்ரல் 17) வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, பணிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்யுங்க.
News April 17, 2025
10 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ. மழை

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிதான் 100 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 10 ஆண்டுகள் கழித்து நேற்று (ஏப்16) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.